By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்யுங்கள்… பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்யுங்கள்… பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் செய்திகள்

ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்யுங்கள்… பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

Nagaraj
Last updated: May 18, 2026 4:42 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களுக்கு மாதம் 10 நாள்களுக்கு பதிலாக 30 நாள்கள் வேலை வழங்க வேண்டும்; பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியிருக்கிறார்கள். புதிய அரசின் வாயிலாக தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று அவர்கள் நம்பும் வேளையில், அந்த நம்பிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையினரின் சேவை புறக்கணிக்க முடியாதது; ஆனால், அவர்களின் நலன்கள் மட்டும் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. அவர்களின் ஊதியம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆணையிட்டு பத்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ஆட்சிகள் மாறினாலும் அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பற்ற நிலை மட்டும் மாறவில்லை என்பது தான் வேதனையான உண்மை.

காவல்துறையினருக்கு உதவும் வகையில், தமிழகத்தில் 1963 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊர்க்காவல் படையில் பணி செய்பவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு வரை ஒருநாள் ஊதியமாக ரூ.67 மட்டும் தான் வழங்கப்பட்டு வந்தது. அந்த ஆண்டில் அவர்களுக்கான ஊதியம் ரூ.152 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனாலும், மாத ஊதியம் 2800 ரூபாயைத் தாண்டாமல் அரசு பார்த்துக்கொண்டது. ஊதிய உயர்வு கோரி ஊர்க்காவல் படையினர்

தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. அதன்படியே அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி 2017 ஆம் ஆண்டில் ஆணையிட்ட அரசு, அவர்களின் பணி நாட்களின் எண்ணிக்கையை ஐந்து நாட்களாக குறைத்துவிட்டது. அதனால், அவர்களின் மாத ஊதியம் ரூ.2800 லிருந்து உயரவில்லை.

மாதத்திற்கு 5 நாள்கள் வேலை போதுமானதல்ல என்றும், பணி நாள்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் ஊர்க்காவல்படையினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 2019 ஆம் ஆண்டில் அவர்களுக்கான பணி நாள்கள் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தப்பட்டாலும், பணி நேரம் 4 மணி நேரமாகவும், ஊதியம் ரூ.280 ஆகவும் குறைக்கப்பட்டது. அதனால், பணிநாள்கள் அதிகரித்தாலும் ஊதியம் மட்டும் உயரவே இல்லை. கூடுதல் நாள்கள் அவர்கள் வேலை செய்தாலும் அதற்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

2021 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, , காவல்துறையினருக்கு பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்குடன் அவர்களின் பணி நாள்கள் உயர்த்தப்படும்; ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தும் வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. எனவே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதில் தவறு ஒன்றும் கிடையாது… பிரேமலதா ஆதரவு

சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்; அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியிட்டால் ஆதரவு: வைத்திலிங்கம் அறிவிப்பு!

பொதுப்பணித்துறையில் புதிய டெண்டர் வழிகாட்டுதல்

தமிழக அரசின் வட்டிச்செலவு ரூ.67,050 கோடி: 5 ஆண்டுகளில் 61% உயர்வு!

TAGGED:anbumani ramadossAssistancecensusHome Guardpermanent employmentwelfareஅன்புமணி ராமதாஸ்உறுதுணைஊர்க்காவல் படைஎண்ணிக்கைநலன் காத்தல்பணி நிரந்தரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?