தர்பங்கா: ஆசிரம வாழ்க்கை வாழ போகிறாராம்… பீஹாரில், அடுத்த சட்டசபை தேர்தல் நடக்கும் வரை ஆசிரம வாழ்க்கை வாழப் போவதாக ஜன் சுரா ஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இதற்காக, பாட்னாவின் புறநகரில் அமைந்துள் ள ஆசிரமத்திற்கு அ வர் குடிபெயர்ந்துள்ளார்.
பீஹாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
விரக்தி முதல்வராக பதவியேற்ற ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார், சமீபத்தில், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்ய சபா எம்.பி.,யானார்.
இதையடுத்து, பீஹாரில் சாம்ராட் சவுத்ரி தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இந்த தேர்தலில், ஜன் சுராஜ் கட்சி நிறுவனரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோரும் போட்டியிட்டார்.
தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது, இவரது தேர்தல் வியூகத்தால் தான் தி.மு.க., வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இதனால், பீஹார் சட்டசபை தேர்தலில், அவரது வியூகம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், பிரசாந்த் கிஷோர் விரக்தி அடைந்தார். இந்நிலையில், பீஹாரில் அடுத்த சட்டசபை தேர்தல் வரும் வரை, பாட்னாவின் புறநகரில் உள்ள ஆசிரமத்தில் வசிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், ஜன் சுராஜ் கட்சி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வரை, ஆசிரம வாழ்க்கையை விட்டு வெளியே வரப்போவதில்லை என்றும் அவர் சூளூரைத்துள்ளார்.
இது குறித்து தர்பங்காவில் நேற்று அவர் கூறியதாவது: பாட்னாவில் இருந்து புறநகரில் உள்ள ஆசிரமத்திற்கு புலம்பெயர்ந்து விட்டேன். ஐ.ஐ.டி., பாட்னா அருகில் உள்ள பீஹார் நவநிர்மாண் ஆசிரமத்தில் தான் இனி வசிக்கப் போகிறேன்.
அடுத்த சட்டசபை தேர்தல் வரை இது தொடரும். வெறும் 10,000 ரூபாய்க்காக மக்கள் தங்களது ஓட்டுகளை விற்கக் கூடாது. பொருளாதார நெருக்கடியால் பீஹாரில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுக்க தவறிய நிதிஷ் குமார், தேர்தல் முடிந்ததும், மாநிலத்தை விட்டே வெளியேறி, டில்லிக்கு சென்றுவிட்டார்.
தேர்தல் வியூகம் அதே சமயம், இங்கு இருந்து வெளியேறுவதற்கு முன்பாக, தன் மகனுக்கு மாநில அரசியலில் நல்ல இடத்தை பிடித்துக் கொடுத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தரும், ‘ஐ – பேக்’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனராக பிரசாந்த் கிஷோர் இயங்கி வந்தார். கடந்த 2024ல் தேர்தல் வியூக வகுப்பாளர் பொறுப்பை உதறிவிட்டு, ஜன் சுராஜ் என்ற தனிக்கட்சியை தொடங்கி, அரசியலுக்கு வந்தார்.