சென்னை: மதுரை மக்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
மதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதாகவும், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் சர்க்கஸில் பயணிப்பதுபோல் பயணிப்பதாகவும், மதுரைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்றும் செல்லூர் ராஜூ சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
செல்லூர் ராஜூவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, பத்து ஆண்டுகாலம் மதுரைக்கு விடிவுகாலம் இல்லாமல் இருந்ததாகவும், பாலங்கள் திறக்கப்பட்டு விரைவில் மதுரைக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் தெரிவித்தார்.