புதுடில்லி: டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே ஒற்றுமை இல்லாததே முதன்மையான காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டெல்லி மாநில தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல, இண்டியா கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இண்டியா கூட்டணி பாடம் கற்க வேண்டும்.
டெல்லி மாநிலத் தேர்தல் முடிவு இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.
இதன்மூலம், பாஜக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் சூது அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதிக்கான மண்ணே தமிழ்நாடு என்பதை உணர்த்தி, நாதகவுக்கு மறைமுகமாகத் துணைபோன பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உரிய பாடத்தைப் புகட்டியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.