மின்சார விமான பொது போக்குவரத்து: சீனாவில் சோதனை ஓட்டம்
சீனா: சோதனை ஓட்டம்… ஓடு பாதையில் ஓடி மேலே கிளம்புவதற்கு பதில் நின்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் போல மேலே எழும்பும் மின்சார விமானத்தை பொது போக்குவரத்துக்கு பயன்படுத்த சீனாவில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. பிராஸ்பெரிட்டி என பெயரிடப்பட்டுள்ள அந்த விமானத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கலாம்.