தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கோயம்புத்தூர் (மலைப் பகுதிகள்), நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ வேகத்திலான காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) எச்சரித்துள்ளது. ஜூன் 27 வரை பரவலாக மழை நீடிக்க வாய்ப்புள்ளது.