சென்னை: விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் பயணிக்க முடியாது. விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் கடந்த கால திட்டங்கள் தொடரும். விவசாயிகளுக்காக புதிய திட்டங்களும் அமல்படுத்தப்படும்.
டெல்டா பகுதிகளில் 2509 கி.மீ. வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன. விவசாயிகள் நலன் கருதி ரூ.134 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுதி திட்டம் அறிவிக்கப்பட்டது. எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என கணிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
