கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 42 பேர் காயமடைந்தனர். உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை ரஷ்யா பயங்கர தாக்குதலை முன்னெடுத்தது. கீவ் பிராந்தியத்தில் புரோவரி, பூச்சா மற்றும் பாஸ்டிக் மாவட்டங்களில் பல இடங்களில் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்துக்களில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 27 பேர் காயமடைந்தனர். புரோவரி நகரம் மற்றும் வெலிகா டைமெர்கா, க்விட்னேவ் மற்றும் பெரெமோஹா கிராமங்களில் பெரிய கிடங்குகளின் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கீவ் நகரில் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு, 15பேர் காயமடைந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
