திருச்சி: 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆன்மிகத் தலங்கள் மற்றும் கோயில்களுக்கு எளிதாகச் சென்று வர சிறப்பு பேருந்து வசதிகள் மற்றும் தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் சுற்றுலா மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை கண்டறிந்து, புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். பூங்காக்கள் அமைத்தல், நதிகளை இணைக்கும் சுற்றுலா திட்டங்கள், வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்வு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.
அரசியல் ஆரோக்கியமாகவும், நாகரிகமாகவும் இருக்க வேண்டும் என்றும், மூத்த அரசியல்வாதிகள் தரக்குறைவான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் ஜோக்கர் ஆட்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியிருப்பது குறித்தும் அவர் விமர்சனம் செய்தார்.
