திருத்துறைப்பூண்டி: ஜாதிச் சான்றிதழ் கேட்டு திருத்துறைப்பூண்டியில் ஆதியன் பழங்குடி இன மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சான்றிதழ் கேட்டு திருத்துறைப்பூண்டியில் ஆதியன் பழங்குடி இன மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆதியன் பழங்குடி இன மக்கள் புகார் அளித்துள்ளனர்.