தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் 76 குடியரசு தினத்தை ஒட்டி மேயர் சண்.ராமநாதன் தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது மற்றும் சான்றிதழை வழங்கினார்.
நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக நடந்தது. அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் நடந்த குடியரசு தினத்தை ஒட்டி காந்தி சிலைக்கு மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்தார். பின்னர் தேசியக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இதையடுத்து மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு விருது, கேடயம் மற்றும் சான்றிதழை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், மண்டலக்குழு தலைவர்கள் ரம்யா சரவணன், புண்ணியமூர்த்தி, கலையரசன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சேர்மகனி, நகர்நல அலுவலர் நமச்சிவாயம், நகர திட்டமிடுனர் முரளி, உதவி ஆணையர்கள் வாசுதேவன், ரமேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.