நாமக்கல்: அதிரடியாக முட்டை விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, கடந்த மாதம் பண்ணைக் கொள்முதல் விலை 6 ரூபாய் 40 காசுகளாக விற்பனையானது.
கடந்த 15 நாட்களில் படிப்படியாக குறைந்து 5 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையானது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதி முட்டை விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், முட்டை உற்பத்தி அதிகரிப்பு, வடமாநிலங்களுக்கு செல்லும் ஏற்றுமதி குறைவு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்து 5 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
இதேபோன்று, பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ 149 ரூபாயாகவும், முட்டைக்கோழி ஒரு கிலோ 82 ரூபாயாகவும் தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.