By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி
    1 Min Read
    உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல்
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    18 வயதில் பேராசிரியர்! உலகின் இளம் பேராசிரியர் என்ற கின்னஸ் சாதனை படைத்த நாதன் தாமஸ்
    1 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் மீட்பு! காசாவில் கூட்டு இறுதிச்சடங்கு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அங்கித் திவாரி லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ‘அனலாக் பன்னீர்’ விற்பனைக்கு தடை!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் ஆப்பிள் டீ
    1 Min Read
    வேப்ப மரம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு: ஆகஸ்ட் 16 முதல் தேர்வுகள் தொடக்கம்
    1 Min Read
    மணல் பரப்பில் நடைப்பயிற்சி செய்வதால் மனநிலை மேம்பாடு அடையும்… ஆய்வில் தகவல்
    2 Min Read
    செயற்கை கண் இமைகள் பொருத்திக்கொள்வதில் ஏற்படும் பாதிப்புகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றும் பிரமிக்க வைக்கும் தஞ்சை அரண்மனைக்கு ஒரு விசிட் அடிப்போமா!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > இன்றும் பிரமிக்க வைக்கும் தஞ்சை அரண்மனைக்கு ஒரு விசிட் அடிப்போமா!!!
சுற்றுலா

இன்றும் பிரமிக்க வைக்கும் தஞ்சை அரண்மனைக்கு ஒரு விசிட் அடிப்போமா!!!

Nagaraj
Last updated: August 6, 2026 6:20 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: 400 ஆண்டுகளுக்கு முன்னாடி நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதுதான் தஞ்சை அரண்மனை. அவர்களை தொடர்ந்து தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களால் இந்த அரண்மனை விரிவுப்படுத்தப்பட்டது. நான்கு நூற்றாண்டுகளை கடந்தாலும் இன்னைக்கும் புஜபலம் காட்டி நான் சிங்கம்ல என்பது போல் கம்பீரமாக தஞ்சையின் பெருமையை பறைசாற்றிக் கொண்டு, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுத் தலமாக, சுற்றுலா இடமாக காட்சியளிக்கிறது தஞ்சை அரண்மனை.

என்னங்க இருக்கு அரண்மனையில என்று கேட்காதீங்க. வந்து பார்த்தால் என்னதான் இல்லை இந்த அரண்மனையில் என்று சொல்லுவீங்க. மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் என வரலாற்றின் வாழ்க்கையை இன்னும் தன்னுள் தாங்கி அசத்துகிறது தஞ்சை அரண்மனை. இந்த அரண்மனை வளாகம் 110 ஏக்கர். தர்பார் மண்டபம், மணி கோபுரம், ஆயுதச் சேமிப்பு கோபுரம், நீதிமன்றம் என நான்கு முதன்மைக் கட்டடங்களைக் கொண்டுள்ளது.

மணி கோபுரத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 7 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்கு புறச் சுவர்களின் மேல் வளைந்த சாளரங்கள் இருக்கு. இதை `தொள்ளக்காது மண்டபம்’ என்று அழைத்துள்ளனர். கண்காணிப்பு கோபுரமாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

தஞ்சையைத் தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம்தான் இந்த தர்பார் மண்டபம். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள், தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது. ஆயுதச் சேமிப்பு இடம் கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை.

அரண்மனை உள்ளே உள்ள நீதிமன்றக் கட்டடத்தை, `ஜார்ஜவா மாளிகை’, `சதர் மாளிகை’ என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள். இது ஏழு மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஐந்து மாடிகள் மட்டுமே உள்ளன.

இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவா நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரண்மனை, கி.பி.1674-லிருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக் கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் புனரமைக்கப்பட்டன.

இந்த அரண்மனை தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுலா என்பது நம்மைப் பரவசப்படுத்துவதாக மட்டுமல்லாமல், நம்மை சுற்றியுள்ள வரலாற்று உண்மைகளை அந்த காலத்திற்கே கொண்டு செல்வது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாங்க… பாருங்க… நம் நாட்டின் கட்டிடக்கலையை புகழை போற்றுங்க. அருமையான சுற்றுலா தலம் என்றால் அதில் ஒன்றாக தஞ்சை அரண்மனையும் அடங்கும் என்பதில் ஐயமில்லை.

You Might Also Like

மனம் நிறையும் சங்குத்துறை கடற்கரை… விடுமுறைக்கு ஏற்ற இனிமையான அனுபவம்

மனசு குளிர்ந்து போகணுமா… போடிமொட்டு சுற்றுலா தலத்திற்கு வாங்க

சுற்றுலா செல்லணுமா… அப்போ ஆனைமலைக்கு விசிட் அடியுங்கள்

TAGGED:architecturefamepalacetanjoretouristஅரண்மனைகட்டிடக்கலைசுற்றுலா தலம்தஞ்சைபுகழ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
சமையல் குறிப்புகள்

சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு கிராமத்து ருசியில் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?