தென்கொரியா: டிரோன் சதித்திட்ட வழக்கில் தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியூன் ஆகியோர் மீது தொடரப்பட்ட டிரோன் சதித்திட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2024 அக்டோபரில் வட கொரியாவின் தலைநகர் பியாங்யாங்கிற்குள் ரகசியமாக ராணுவ டிரோன்களை அனுப்பி துண்டுப் பிரசுரங்களை வீச உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. வட கொரியாவைத் தூண்டிவிட்டு பதற்ற சூழலை உருவாக்கி, அதனை பயன்படுத்தி ராணுவச் சட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் தீட்டப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தேசத்துரோக வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த யூன் சுக் யோலுக்கு, தற்போது இந்த வழக்கிலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியூனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.