தெஹ்ரான்: மேற்கு ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து சிதறிய பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
சனந்தாஜ் மற்றும் ஹமேடான் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இந்த விபத்து ஏற்பட்டது. சென்று கொண்டிருந்த எரிபொருள் டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ அருகில் சென்ற பல வாகனங்களுக்கும் வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சனந்தாஜ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் அவசரகால மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதலும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
