சீனா: சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வெளியேறி உள்ளனர்.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 12 போ் உயிரிழந்துள்ளனா்.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷிமென் கவுண்டியில் பெய்த பலத்த மழையினால் 5 போ் உயிரிழந்த நிலையில், 11 பேரைக் காணவில்லை. இப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 19,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
தென்மேற்கு சீனாவின் குய்சூ மாகாணத்தில் மழையினால் 4 போ் உயிரிழந்தனா்; 5 பேரைக் காணவில்லை. இப்பகுதியில் சுமார் 3,700-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா்.