By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உடல் ஆரோக்கியம் மேன்மையாக தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > உடல் ஆரோக்கியம் மேன்மையாக தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி
மருத்துவ குறிப்புகள்

உடல் ஆரோக்கியம் மேன்மையாக தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி

Nagaraj
Last updated: July 7, 2025 6:15 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் உடல் வலுவடைகிறது. குழந்தைகள் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் ஏற்றதாகவும், சிறந்த உடற்பயிற்சியாகவும் ஸ்கிப்பிங் விளங்குகிறது.

குழந்தைகள் விரும்பி விளையாடும் உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளுள் ஒன்றாக ‘ஸ்கிப்பிங்’ அமைந்திருக்கிறது. வீட்டின் முற்றங்கள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் என எந்த இடத்திலும் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதால் குழந்தைகள் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் ஏற்றதாகவும், சிறந்த உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது.

உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்பட பிற வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை தவிர்ப்பதற்கு ஸ்கிப்பிங் பயிற்சி சிறந்தது என்று ஐரோப்பிய ஜர்னல் ஆப் அப்ளைடு பிசியாலஜி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த பயிற்சி முறையாக ஸ்கிப்பிங் விளங்குகிறது. ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் 1300 கலோரிகளை எரிக்க வாய்ப்புள்ளது. ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சியுடன் ஒப்பிடும்போது ஸ்கிப்பிங் அதிக கலோரிகளை எரிக்க வல்லது.

ஆரம்பத்தில் சில நாட்கள் ஸ்கிப்பிங் செய்த பிறகு உடல் வலியை உணரலாம். முன்பைவிட கை, கால் தசைகள் அதிகமாக வேலை செய்வதால் இந்த பிரச்சினை ஏற்படும். இருப்பினும் கை, கால்களில் உள்ள தசைகள் வலு வடைவதற்கு உதவும் முழு உடற்பயிற்சியாக இது அமையும். உற்சாகத்துடன் செயல்படவும் தூண்டும்.

ஸ்கிப்பிங் செய்வது உடல் உறுப்புகளுக்கு ஒருங்கிணைப்பை வழங்கும் செயல்முறையாகவும் அமையும். கண்கள், மூளை மற்றும் தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட உதவும். தினமும் அரை மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வது அறிவாற்றல் மற்றும் நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்கிப்பிங் செய்வதால் எலும்பு சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்பது சுகாதார நிபுணர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஸ்கிப்பிங் செய்தபடி மேலும் கீழும் குதிக்கும்போது அனைத்து தசைகளும் தூண்டப்படும். அதனால் எலும்பு பலம் அதிகரிப்பதோடு எலும்புகளின் அடர்த்தியும் கூடும். எலும்புகளை சுற்றியிருக்கும் தசைகளும் பலப்படும்.

ஸ்கிப்பிங் செய்வது சிறந்த கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாகும். இது இதய செயல்பாட்டையும், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். உடலில் ஸ்டெமினாவை அதிகரிக்க செய்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

You Might Also Like

மருத்துவ குணங்கள் நிறைந்த சப்போட்டா பழம்!

உடல் எடையைக் குறைக்க உதவும் கொய்யாப்பழம்!

பல் நோய்கள் சிறுவர்களுக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ?

பல விதமான நோய்களை குணப்படுத்தும் தனியா!

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொத்தமல்லி இலைச்சாறு

TAGGED:bone strengthfunctionHeart HealthmusclesSkippingஇதய ஆரோக்கியம்எலும்பு பலம்தசைகள்ஸ்கிப்பிங்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?