நடிகை இஷா கோபிகர், 1998-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சந்திரலேகா படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். கிருஷ்ண வம்சி இயக்கத்தில், நாகர்ஜுனாவுடன் ஜோடியாக நடித்த இப்படம் மட்டுமல்ல, அந்த படப்பிடிப்பு அனுபவமும் இப்போது மீண்டும் பேசப்படுகின்றது.

ஒரு பேட்டியில் தனது முதல் பட அனுபவத்தை நினைவுகூரும் இஷா, “ஒரு காட்சியில் நாகர்ஜுனா எனது கன்னத்தில் அறைய வேண்டியிருந்தது. முதலில் லைட் ஆகவே அடித்தார். ஆனால், நான் அவரிடம், ‘நல்லா அடியுங்கள்’ என்றேன். இயக்குநர் ரீடேக் கேட்டதால், 14 முறை அடித்தார். கன்னத்தில் கை விரல்களின் தடமே பதிந்து விட்டது,” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நாகர்ஜுனா சங்கடப்பட்டு மன்னிப்பும் கேட்டதாக கூறினார். ஆனால் அதற்கு பதிலளித்த இஷா, “நான் தான் உங்களிடம் அடியுங்கள் என சொன்னேன். நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?” என சமாதானம் செய்ததாக நினைவுகூறுகிறார்.
இந்த நிகழ்வின் பின்னணியில், தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமையை நிரூபிக்க தயாராக இருந்த ஒரு புதுமுக நடிகையின் மனநிலையை இஷா வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார். சினிமா உலகில் தொடக்க காலத்தில் எத்தனையோ சவால்கள் உள்ளன என்பதை இந்த அனுபவம் உணர்த்துகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து, தமிழ், கன்னடம், ஹிந்தி சினிமாவிலும் வெற்றிகரமாக பயணித்தார் இஷா. காதல் கவிதை, நரசிம்மா, அயலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு பிறகு கோலிவுட்டில் அயலான் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்போது அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மகளுடன் இணைந்து வசிக்கிறார்.