By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகின் முதல் டிரில்லியனர் ஆன எலான் மஸ்க்
    1 Min Read
    முன்னாள் தென் கொரியா அதிபருக்கு 30 ஆண்டு சிறை
    1 Min Read
    இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை; நேபாள அரசு விளக்கம்
    1 Min Read
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    1 Min Read
    கேரளாவில் மீண்டும் பரவும் ஷிகெல்லா; பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்; பயனர்கள் அவதி
    1 Min Read
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்
    2 Min Read
    திருச்சி மண்டலம் சார்பில் தஞ்சையில் ஸ்டேட் வங்கி ஊழியர் கலந்தாய்வு கூட்டம்
    2 Min Read
    ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை
    1 Min Read
    தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    செல்ல நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த உரிமையாளர்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நவீன கட்டிடக்கலைக்கு சவால் விடும் தஞ்சாவூர் அரண்மனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > நவீன கட்டிடக்கலைக்கு சவால் விடும் தஞ்சாவூர் அரண்மனை
தமிழகம்

நவீன கட்டிடக்கலைக்கு சவால் விடும் தஞ்சாவூர் அரண்மனை

Nagaraj
Last updated: August 28, 2025 3:32 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: செம கெத்தா, கம்பீரமாக என்னை அசைக்க முடியாதுன்னு சவால் விட்டு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருந்தாலும், இக்கால கட்டிடக்கலைக்கு சவால் விடும் வகையில் வானுயர்ந்து நிற்கும் தஞ்சை அரண்மனை தஞ்சைக்கு சுற்றுலாவாக வருபவர்கள் தேடி வந்து பார்த்துச் செல்லும் முக்கிய இடத்தில் முதன்மையானதாக உள்ளது.

இந்த அரண்மனை தர்பார் மண்டபம், அருங்காட்சியகம், கலைக்கூடம், சரஸ்வதி மஹால், மணிமண்டபம், சங்கீத மகால் என 6 பகுதிகளாக காணப்படுகிறது. சரிங்க இதில் தர்பார் மண்டபத்தையும், அருங்காட்சியகத்திலும் என்ன இருக்கு? பார்த்து வியப்படைய எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தர்பார் மண்டபம்:
பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இந்த தர்பார் மண்டபம் அக்காலத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கும், முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கும் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் வாயிலாக தெரிய வருகிறது.

இந்த தர்பார் மண்டபத்தின் முன்பகுதி திறந்த வெளியாகவும் மற்ற மூன்று பகுதிகளும் அடைக்கப்பட்டு மிகவும் பிரம்மிக்க வைக்கும் முறையில் காட்சியளிக்கிறது. இந்த மண்டபத்தின் மையப்பகுதியில் மன்னர் அமர்ந்து தீர்ப்பு வழங்க சிம்மாசனம் அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 46 தூண்கள் கொண்ட இந்த தர்பார் மண்டபம் சிவன்‌, விஷ்ணு, இந்திரன் ஆகியோர் தேவியர்களுடன்‌ காட்சியளிக்கும் சுதை சிற்பங்கள், தஞ்சை ஓவியங்களுடன் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது.

இந்த தர்பார் மண்டபத்தில் ஆரம்பத்தில் இருந்த நாயக்கர்களின் ஓவியங்களும் அதன் பிறகு வந்த மராட்டியர்களின் ஓவியங்களும் ஒன்றோடு ஒன்று மேலே கலந்து மிக அழகான முறையில் காட்சியளிக்கிறது. தர்பார் மண்டபத்தில் மேற்கூரையில் இருக்கும் ஒரு அமைப்பானது மிகவும் நுணுக்கமான முறையில் காணப்படுகிறது. மேலும் இந்த தர்பார் மண்டபத்திற்கு பக்கத்தில் இருக்கும் மண்டபமானது நூற்றுக்கும் மேற்பட்ட தூண்களைக் கொண்டு காட்சியளிக்கிறது.

அருங்காட்சியகம்:

அருங்காட்சியகம் ஆனது அரண்மனையின் முதல் மாடியில் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் மராட்டிய மன்னர்கள் பிரிட்டிஷ் காலத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் சரபோஜி மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், மன்னர்களின் உடைகள், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் மன்னர்கள் பயன்படுத்திய நாற்காலிகள், வீணைகள் மற்றும் அக்காலத்து துப்பாக்கிகள், வாள்கள், பழங்கால பீங்கான் பொருட்கள், சமைப்பதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் 20 நாடுகளின் நாணயங்கள் இந்தியாவில் ஆரம்பகால முதல் இக்காலம் வரை இருக்கும் அனைத்து நாணயங்களும் உதாரணமாக டச்சு நாணயம், சூரத் நாணயம் என அசத்துகிறது.

You Might Also Like

6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்

திருச்சி மண்டலம் சார்பில் தஞ்சையில் ஸ்டேட் வங்கி ஊழியர் கலந்தாய்வு கூட்டம்

ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை

தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!

செல்ல நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த உரிமையாளர்

TAGGED:Art GalleryDurbar HallMani MandapammuseumpalaceSaraswati MahalThanjavurஅரண்மனைஅருங்காட்சியகம்கலைக்கூடம்சரஸ்வதி மஹால்தஞ்சாவூர்தர்பார் மண்டபம்மணிமண்டபம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

6 மணி நேரம் கடின அறுவை சிகிச்சை: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?