By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை
    1 Min Read
    ரம்பூட்டான் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்
    1 Min Read
    நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பான் செக்கர்ஸ் கல்லூரி நடத்திய பசுமைப்பயணம் பிரமாண்ட நிகழ்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பான் செக்கர்ஸ் கல்லூரி நடத்திய பசுமைப்பயணம் பிரமாண்ட நிகழ்ச்சி
தமிழகம்

பான் செக்கர்ஸ் கல்லூரி நடத்திய பசுமைப்பயணம் பிரமாண்ட நிகழ்ச்சி

Nagaraj
Last updated: November 12, 2025 7:16 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் கல்லூரியில் இயற்கையைக் காப்போம், வாழ்வுரிமையை மீட்போம் என்ற தலைப்பில் “பசுமைப் பயணம்” என்ற மாபெரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இதை ஒட்டி சாலையில் தூய்மைபணி மேற்கொண்டு 1 டன் நெகிழிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது

தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலையில் அமைந்துள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் முன்னெடுப்பில் இன்று தமிழக துறவியர் பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப் தோழமை சூழலியல் இயக்கங்கள் தஞ்சாவூர் மையம் ஆகியவை இணைந்து நடத்திய “பசுமைப் பயணம்” மாபெரும் நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு இயற்கையைக் காப்போம், வாழ்வுரிமையை மீட்போம் என்னும் பசுமைப்பயணத்தின் தொடக்கமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பயணத்தை கடந்த 5-ந் தேதி தொடங்கியவர்கள் தஞ்சைக்கு நேற்று மாலை வந்து சேர்ந்தனர்.

இதையடுத்து பூண்டி புஷ்பம் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில், தஞ்சாவூர் தெற்கு ரோட்டரி சங்க முன்ணள் துணை ஆளுநர் டாக்டர் பாலசுந்தரம் முன்னிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிர்புறத்தில் சைக்கிளில் பயணம் செய்து வந்தவர்களை மேளதாளத்துடன் வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று காலை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி அமைந்திருக்கும் விளார் புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் தூய்மை செய்யப்பட்டு ஒரு டன் நெகிழிப் பொருட்கள் ஒப்படைக்கும் பணி நடைபெற்றது.
இந்த விழாவில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) முதல்வர் அருட்சகோதரி விக்டோரியா வரவேற்றார். தஞ்சாவூர் மறைமாவட்டம் ஆயர்சகாயராஜ், தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ணமடம் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அல்மாஸ்அலி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வைப் பற்றிய அறிமுகத்தை தமிழக துறவியர் பேரவைத் தலைவர் முனைவர் அருட்சகோதரி மரியபிலோமி வழங்கினார்.

ஒரு டன் நெகிழிப் பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை எம்.பி., ச.முரசொலி துவங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் கண்ணன் 1 டன் நெகிழிப் பொருட்களைப் பெற்றுக் கொண்டார். இதற்காக சிறப்பாக பணிபுரிந்த மாணவ, மாணவிகளை பாராட்டி எம்எல்ஏ., துரை சந்திரசேகரன் மரக்கன்றுகள் வழங்கி கௌரவித்தார். மேலும் விளார் புறவழிச்சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடும்பணியினை மேயர் சண். இராமநாதன், சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பராமரிப்புப் பணியினை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் செல்வக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம்பூபதி பூமியினைக் காப்போம் என்ற விழிப்புணர்வு குறித்து 50,000 நபர்களிடம் பெற்ற கையொப்பங்கள் கோப்பினை தமிழக துறவியர் பேரவைத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். விளார் புறவழிச்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி 800மீட்டர் தடுப்பு வேலி அமைப்பினை தஞ்சாவூர் ஆதிகாலத்து அலங்கார மாளிகை துணை பொது மேலாளர் ஜோதி கணேஷ் அமைத்துக் கொடுக்க ஒப்புதல் கொடுத்தார். தமிழ்நாடு அய்க்கஃப் குழுவினர் வீதி நாடகம் நடத்தினர். அடைக்கல அன்னை சபை தஞ்சை மாநில தலைமைச் சகோதரி ஜெஸிந்தாமேரி “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” உறுதிமொழி வழங்கினார். மதர் தெரசா பவுண்டேசன் தலைவர்சவரிமுத்து நன்றியுரை வழங்கினார்.

இதையடுத்து திருக்கானூர்பட்டி நான்குவழி பிரிவு சாலையில், தஞ்சாவூர் வனவிரிவாக்க சரகம் வன விரிவாக்க சரகர் கிருஷ்ணசாமி “மரக்கன்றுகள் நடுதல்” நிகழ்வைத் தொடங்கி வைத்தார். மதியம் “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலையில் அண்ணா நூற்றாண்டு அரங்கில் “பசுமைப் பயணம்” குறித்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

You Might Also Like

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை

ரம்பூட்டான் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்

அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்

நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!

TAGGED:Green Walkpublic meetingTree PlantingVote of Thanksநன்றியுரைபசுமைப்பயணம்பொதுக்கூட்டம்மரக்கன்று நடுதல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?