தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வரும் 26 ம் தேதி தஞ்சை உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்கும் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது..
அந்த மாநாட்டில் 15 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்… திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி MP தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது..
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் 1.25 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு , பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மகளிர் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் போக்கு வரத்து வசதிகள், குடிநீர் , உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் டெல்டா மண்டலத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் இப்பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்..
மாநாட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் மின்னொளியில் தற்போதே பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.. மாநாட்டில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட மகளிர் 1.25 லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்..