By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?
    1 Min Read
    சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்
    2 Min Read
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள்
    1 Min Read
    ஊட்டசத்து மிகுந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இஸ்ரேல் பயணத்தில் 27 ஒப்பந்தங்கள் கையெழுத்து… இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > இஸ்ரேல் பயணத்தில் 27 ஒப்பந்தங்கள் கையெழுத்து… இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி
உலகம்

இஸ்ரேல் பயணத்தில் 27 ஒப்பந்தங்கள் கையெழுத்து… இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி

Nagaraj
Last updated: February 27, 2026 7:17 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

இஸ்ரேல்: இஸ்ரேல் பயணம் நிறைவடைந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி. இந்த பயணத்தில் 27 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

அதன்பின்னர் நேற்று மாலை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த உரைக்குப்பின் பிரதமர் மோடிக்கு ‘நெசெட் சபாநாயகர்’ பதக்கம் வழங்கப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இதனை வழங்கினார்.

இதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த உயரிய பதக்கம் பெறும் முதலாவது இந்திய பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் ஆகிய பெருமைகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள யாத் வஷேம் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.

யாத் வஷேம் என்பது 2-ம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் ஆகும். அந்த நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்சாக்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இஸ்ரேல் இடையிலான கல்வி, வேலைவாய்ப்பு, புத்தாக்கம், தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இதன் பின்னர் பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து இந்தியா-இஸ்ரேல் இடையே விவசாயம், கல்வி, வணிகம், செயற்கை நுண்ணறிவு, மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “உலகத்தில் பயங்கரவாதத்திற்கு எங்கும் இடமில்லை என்பதில் இந்தியாவும், இஸ்ரேலும் உறுதியாக உள்ளன. மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும். அது இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காசா அமைதி ஒப்பந்தம் உள்ளிட்ட அமைதிக்கான முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விமானம் மூலம் இந்தியாவிற்கு புறப்பட்டார். இஸ்ரேல் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் மொத்தம் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

You Might Also Like

மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது

சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை

ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்

ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்

ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

TAGGED:Agreementscompletion of the tripIndiaIsraelPrime Minister Modiunderstandingஇந்தியாஇஸ்ரேல்ஒப்பந்தங்கள்பயணம் நிறைவுபிரதமர் மோடிபுரிந்துணர்வு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?