மும்பை: நடிகை ஹன்சிகா – சோஹைல் கதுரியாவுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹன்சிகாவின் 4 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
நடிகை ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியா தம்பதிக்கு மும்பை பாந்த்ரா குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ்,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் 2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே சோஹேல் கதுரியா – ஹன்சிகா ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு முதல் வதந்திகள் பரவி வந்தன. இந்த சூழலில் நடிகை ஹன்சிகா மோத்வானி, மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி பரஸ்பர ஒப்புதல் மனு மூலம் பிரிவினை கோரி இருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியுள்ளது. மேலும் ஹன்சிகா தரப்பு ஜீவனாம்சம் வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.