சென்னை: முதலமைச்சரை விமர்சிக்கப்போய் வம்பில் சிக்கி உள்ளார் சி.வி.சண்முகம். அவர் பேசியது அவருக்கே யு-டர்ன் அடித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், திமுகவை விமர்சிக்க நடிகை நயன்தாரா பேரைப் பயன்படுத்தியுள்ளார். இன்று விழுப்புரத்தில் அவர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில்,
“அப்துல் கலாம் கனவுக் காண சொன்னார். இவர் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) அதைவிட ஒருபடி மேலேச்சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் எனச் சொல்கிறார். ஆமாம், எனக்கு நயன்தாரா வேண்டும். என் கனவை நிறைவேற்றுவாரா? கேட்பார்கள் எனக்கு நயன்தாராவை கல்யாணம் செய்து வைய்யுங்கள் என்று. இவர் நிறைவேற்றுவாரா?” எனப் பேசியிருந்தார்.
இவரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தநிலையில் தற்போது இதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார் சி.வி. சண்முகம். அவரது பேச்சு தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், எந்தவிதமான தவறான நோக்கத்துடனும் இப்படி கூறவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.