ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்குபட நிகழ்ச்சியில், நடிகர் பார்த்திபன் தனது சாதிப்பெயரை வெளிப்படுத்திக் கொண்டது சர்ச்சையானது.
இந்நிலையில் இந்த விஷயத்திற்கு மன்னிப்பு கோரி தனது எக்ஸ் தளத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் வாய் தவறி கிண்டல் பாணியில் சொன்னேனேத் தவிர, சாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புவனல்ல என பார்த்திபன் தெரிவித்துள்ளார். தனது பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிஷா விஷயத்தில் குந்த வை என்று கூறி கடும் விமர்சனம் எழுந்த நிலையில் பார்த்திபன் மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.