சென்னை: தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது பொடுகுதான். இந்தப் பொடுகினை முற்றிலும் ஒழிப்பது எப்படி என்று நாம் இப்போது பார்க்கலாம்.
தேவையானவை:
வேப்பம் கொழுந்து- கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய்- 50 மில்லி
சீரகம்- 1 ஸ்பூன்
செய்முறை: சீரகத்தினைப் பொடித்துக் கொள்ளவும். அடுத்து வேப்பம் கொழுந்தினை லேசாக நசுக்கிக் கொள்ளவும். சீரகத் தூள் மற்றும் நசுக்கிய வேப்பம் கொழுந்தினை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைக்கவும்.
இந்த வேப்பம் கொழுந்து ஆயிலை தலையில் தேய்த்து நன்கு ஊறவிடவும், அடுத்தநாள் சீயக்காய் போட்டு முடியினை அலசினால் தலையில் உள்ள பொடுகானது காணாமல் போய்விடும். இதனை வாரத்தில் 2 முறை தொடர்ந்து செய்து வர வேண்டும்.