கரூர்: கரூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை சட்டத்தை மத்திய அரசு சிதைப்பதாக கூறி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
கரூர், வெண்ணமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கரூர் ஒன்றியம் சார்பில் கிராமப்புற வேலை உறுதிச் சட்டம், 100 நாள் வேலைச் சட்டத்தை மத்திய அரசு சிதைக்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக கூறி வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றிய அமைப்பாளர் துரைசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் 2025 டிசம்பர் மாதம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 100 நாள் வேலை சட்டத்தை (mgnrega) ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக வி.பி.ஜி ராம்ஜி என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த சட்டத்தால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் 2026 மார்ச் 31 வரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பது கிராம மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.