சென்னை: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புதுடில்லியில் சந்தித்து பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை வழங்கினார்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகள், கூடுதல் அவசர சேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும் சுமார் 1,500 கிலோமீட்டர் நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாக மேம்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு–திண்டிவனம், கோயம்புத்தூர் புறவழிச்சாலை, திருச்சி–கரூர், மாதவரம்–சோழவரம் உயர்மட்ட சாலை உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.