சென்னை: தமிழகத்தில் 2027 உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வார்டு மறுவரையறை பணிகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 177 கிராம ஊராட்சிகளில் உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயம் மற்றும் வார்டு எல்லை மறுவரையறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்படி உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
2027 மார்ச் மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.