பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சினியாகோவா மற்றும் டவுன்சென்ட் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், சினியாகோவா மற்றும் டவுன்சென்ட் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் அனா டேனிலினா மற்றும் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ரூனிக் ஜோடியை எதிர்கொண்ட சினியாகோவா-டவுன்சென்ட் ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சினியாகோவா தனது 4வது பிரெஞ்ச் ஓபன் பெண்கள் இரட்டையர் பட்டத்தையும், மொத்தமாக 11வது கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டத்தையும் கைப்பற்றினார். அதேநேரத்தில் டவுன்சென்ட் தனது முதல் பிரெஞ்ச் ஓபன் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.