மும்பை: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷ்ரேயஸ் ஐயர், அந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கேப்டனாக நியமிக்கப்பட்டதால் என் ஆளுமையை மாற்றிக்கொள்ள மாட்டேன். நான் எப்போதும் எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பேன். மற்றொருவரின் நிழலாக செயல்பட விரும்பவில்லை” என்றார்.
மேலும், “இளம் வயதிலிருந்தே சவால்களை விரும்புகிறேன். மும்பை போன்ற நகரில் வளர்ந்ததால் போட்டி மனப்பான்மை இயல்பாகவே உருவாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வேன்” என்று கூறினார்.
அவரது இந்த கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.