சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரை இயக்கி கவனம் பெற்றார்.
முதல் மரியாதை, கிழக்கே போகும் ரெயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய அவர், ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்திருந்தார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவால் மிகுந்த மனவேதனையிலும் இருந்தார்.
இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84), சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.