மும்பை: இந்திய இளம் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதார், இங்கிலாந்தின் வார்விக் ஷைர் கவுன்டி அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட இந்திய இளம் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான மானவ் சுதார் சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதுவரை 29 முதல் தர போட்டிகளில் 129 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அவர், வார்விக் ஷைர் அணிக்காக யார்க் ஷைர் மற்றும் சாமர்செட் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் களமிறங்க உள்ளார்.
“கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அணியின் வெற்றிக்காக சிறப்பாக செயல்படுவேன்” என மானவ் சுதார் தெரிவித்துள்ளார்.