புதுடில்லி: நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் வரவேற்பளித்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற முதல்வர் விஜய், ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிடி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முதல்வர் விஜய் கருத்துகளை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.