பின்லாந்து: ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பல்வேறு முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியது விலை மற்றும் கிடைப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது என்றும், முன்னதாக ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கியவர்கள் ஐரோப்பிய நாடுகளே என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய தயாரிப்பு ஆயுதங்களால் எந்த ஐரோப்பிய நாடும் தாக்கப்படுவதில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்த ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டவை என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.