மும்பை: ஐபிஎல் தொடரில் சாதனை படைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரம் என்றும், சச்சின்-கோலியைவிட பெரிய உயரத்தை எட்டும் திறன் கொண்டவர் என்றும் டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 776 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார். மேலும் ஆரஞ்சு கேப் உள்பட 5 விருதுகளை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், வைபவ் சூர்யவன்ஷியை இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து என பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வைபவ் சூர்யவன்ஷி ஒரு தனி ரகம். 14 அல்லது 15 வயதில் இவரைப் போன்ற திறமையான வீரரை தற்போது காண்பது அரிது. அவர் உண்மையிலேயே ஒரு அதிசயமான வீரர்” என்றார்.
மேலும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களை விடவும் தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதியில் மிகப்பெரிய உயரத்தை எட்டக்கூடிய திறன் வைபவுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இளம் வயதிலேயே கிடைத்துள்ள புகழை சரியாக கையாள இந்திய அணி நிர்வாகம் அவரை மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் வழிநடத்த வேண்டும் என்றும் ஸ்டெயின் வலியுறுத்தினார்.
வைபவின் திறமையை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும், எதிர்காலத்தில் வேகமான மற்றும் பவுன்ஸ் பந்துகளுக்கு எதிராக அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது முக்கியமாக இருக்கும் என்றும்