அமெரிக்கா: ட்ரென் டி அராகுவா குற்றக் கும்பலின் தலைவர் ஹெக்டர் கெரேரோ வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ட்ரென் டி அராகுவா என்ற சர்வதேச குற்றக் கும்பலின் தலைவர் ஹெக்டர் ரஸ்தன்போர்டு கெரேரோ புளோரஸ், வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலா பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்புடன் இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெரேரோ தலைமையிலான இந்த குற்றக் கும்பல் வெனிசுலாவை தாண்டி கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளிலும் தனது வலையமைப்பை விரிவுபடுத்தியிருந்தது. புலம்பெயர்ந்த மக்களை மிரட்டி பணம் பறித்தல், பாலியல் கடத்தல், கூலிப்படை கொலைகள் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்கா உட்பட எட்டு நாடுகளில் இந்த கும்பலின் கிளைகள் செயல்பட்டு வருவதாகவும், உள்ளூர் குற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.