நார்வே: நார்வே பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் மகன் மரியஸ் போர்க் ஹோய்பிக்கு பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நார்வே அரச குடும்பத்துடன் தொடர்புடைய மரியஸ் போர்க் ஹோய்பி மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த ஓஸ்லோ நீதிமன்றம், சில குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்தாலும், மற்ற முக்கிய குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. உடல்நலக் காரணங்களால் நேரில் ஆஜராக முடியாத அவர், காணொளி வாயிலாக நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றார்.
அரசு தரப்பு ஏழு ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு நார்வே அரச குடும்பத்தின் மீது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.