உத்தரப் பிரதேசம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு விதிகளை மீறியதாக அந்த கட்டிடத்தின் கூட்டு உரிமையாளர்கள் 4 பேரை லக்னோ போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.