ராஜஸ்தான்: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் பகுதியில் ரூ.1.5 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்ட 21 அடி உயர பிரம்மாண்ட சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
வாஜ்பாயின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமித் ஷா, விழாவில் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
வாஜ்பாய் தனது சிறுவயது முதலே தேச நலனை குறிக்கோளாக கொண்டு தேசியவாத பாதையில் பயணித்தவர் என அமித் ஷா புகழாரம் சூட்டினார்.
சர்வதேச நாடுகளின் அழுத்தங்களையும் மீறி பொக்ரான் அணு ஆயுத சோதனையை நடத்தி இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றியவர் வாஜ்பாய் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கிராமங்களை சாலைகள் மூலம் இணைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளித்ததுடன், பழங்குடியினர் நல அமைச்சகத்தை உருவாக்கியதும் வாஜ்பாய் ஆட்சியின் முக்கிய சாதனைகளில் ஒன்று என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
