ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் நடிகரும் நாட்டுப்புறப் பாடகருமான ஈஸ்வர் சாய், நடிகை ஒருவருடன் தனியாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவரது மனைவி அங்கு சென்று இருவரையும் பிடித்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட கட்டிடத்தில் நடிகை ஒருவருடன் ஈஸ்வர் சாய் இருந்ததாக தகவல் அறிந்த அவரது மனைவி, உடனடியாக அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கணவர் மற்றும் நடிகைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. எனினும், வீடியோவில் இடம்பெறும் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் குறித்து போலீஸ் விசாரணைக்குப் பிறகே உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
