அமெரிக்கா: ஈரானுக்கு எதிராக ‘பொருளாதார D-Day’ நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் சர்வதேச சட்டத்துக்கும், நாடுகளின் இறையாண்மைக்கும் எதிரானவை என குற்றம்சாட்டியுள்ளார்.
மூன்றாம் நாடுகளுடன் சட்டப்பூர்வமாக வர்த்தகம் செய்யும் நாடுகளை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது என்றும், இதுபோன்ற இரண்டாம் நிலைத் தடைகளுக்கு சர்வதேச சட்டத்தில் அடிப்படை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
