முசாபர்: உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், கடந்த நான்கு மாதங்களில் 10 கொலை வழக்குகளை விசாரித்து 22 பேருக்கு மரண தண்டனை வழங்கிய கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ரவிகுமார் திவாகர் விசாரிக்க இருந்த 100 கொலை வழக்குகள் வேறு நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
விரைவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் அனைத்தும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடியவை என மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரமோத் தியாகி தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மரண தண்டனைகள் வழங்கப்பட்டதால் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே வழக்குகள் மாற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
