புதுடில்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழிக் கல்விக் கொள்கையால் எந்தவித அழுத்தமும் ஏற்படக்கூடாது என்றும், நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால் அவற்றை உடனடியாக களைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்கும் திட்டம் கடந்த ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மொழிகளை அறிமுகப்படுத்தும்போது தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், போதிய உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்திய மற்றும் வட்டார மொழிகள் அனைத்தையும் சமமாக மதிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு தேவையற்ற கல்விச் சுமை ஏற்படாத வகையில் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
