அமெரிக்கா: அமெரிக்காவின் தேசிய பொதுக்கடன் ரூ.3,840 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
2026 நிதியாண்டு முடிவில் அமெரிக்காவின் கடன் ரூ.3,773 லட்சம் கோடியாக உயரும் என காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் முன்பு கணித்திருந்தது. ஆனால், நிதியாண்டு முடியும்முன்பே கடன் தொகை அந்த அளவையும் தாண்டியுள்ளது.
மேற்காசிய போர்ச்சூழல், அதிகரித்து வரும் ராணுவச் செலவுகள், சமூகப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் உயர்ந்த வட்டி விகிதங்களால் கடனுக்கான வட்டி செலவு அதிகரித்தது உள்ளிட்டவை கடன் உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பொதுச் செலவினங்களைக் குறைப்பதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்த அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
