சென்னை: நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி. இயக்கி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் 2020-ம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகி வருகிறது.
முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதில் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருடன் ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகிபாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ரெஜினா கசாண்ட்ரா இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை வாங்குவதற்கு முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டியிட்டு வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
