புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்-மந்திரி உமர் அப்துல்லா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உமர் அப்துல்லா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு மீண்டும் முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி உமர் அப்துல்லா கடந்த ஜூலை 20-ம் தேதி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
