சென்னை: தாராபுரம் சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான அரசியல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் தேர்தல் பணிக்குழுவை அமைத்து முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அமைச்சர் அருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் விஜய் பாலாஜி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 எம்எல்ஏக்களுக்கு துணைப் பொறுப்பு
துணைப் பொறுப்பாளர்களாக பாலமுருகன், சத்யபாமா, ராம்குமார், திலீப் மற்றும் சத்யா ஆகிய ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் அமைத்துள்ள தேர்தல் பணி மற்றும் கண்காணிப்புக் குழுக்களில் மொத்தம் 11 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று தவெக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
