சென்னை: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் ஆற்றிய உரையை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேயர் பிரியா ஆவேசமாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து முதல்வர் விஜய் பேசியதாக கூறப்படும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய மேயர் பிரியா, தனது கட்சித் தலைவரை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என்ற வகையில் ஆவேசமாகக் கருத்து தெரிவித்தார்.
‘மாண்புமிகுவாக இருந்தாலும்…’
“என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்று சொல்வார்கள். அதேபோல் எங்கள் தலைவரைத் தொட்டுப் பேசுபவர் யாராக இருந்தாலும் சரி, அவர் மாண்புமிகுவாகவே இருந்தாலும் நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்று அவர் பேசினார். மேயர் பிரியாவின் இந்தக் கருத்து, ஆர்ப்பாட்டத்தில் இருந்த திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில் அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
