சென்னை: சென்னை புழல் ஏரியில் நீர்வரத்து குறைந்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2403 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று 298 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 242 கன அடியாக சரிந்துள்ளது.
சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரி: 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 115 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று 69 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 35 கன அடியாக சரிந்துள்ளது.
கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரி: 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட, கண்ணங்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில், 303 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மீண்டும் 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 44.02% செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணங்கோட்டை. 5 பெரிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டிஎம்சி, தற்போதைய நீர் இருப்பு 5.175 டிஎம்சி.